Categories
உலக செய்திகள்

“கப்பல் கவிழ்ந்து விபத்து”….. 64 பேரின் நிலைமை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கப்பல் கவிழ்ந்த விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகில் 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் மேற்கொண்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போய்விட்டார்கள் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் இன்னும் 20 பேரின் நிலை என்ன என்ற தகவல் கிடைக்கவில்லை.

அதாவது கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாகவும், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்தார். இதற்கிடையில் சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் கூறினார். மேலும் மற்றொரு துறைமுக அதிகாரியான அட்ரியன் பேப்ரைஸ் கூறியபோது, கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன்  காரணமாக  கவிழ்ந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |