இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான்சானியாவில் இருந்து இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் ஒன்று கிளம்பி அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் மீது திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஈரான் ஏவுகணை என்று மற்றொருபுறம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கப்பல் உரிமையாளர் கப்பல் சேதமடைந்தாலும் அது இந்தியாவை நோக்கியே பயணிக்கட்டும் என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இந்தியா வந்தவுடன் சேதமடைந்த கப்பலை பழுது பார்க்கும் பணி நடைபெறும். இருப்பினும் இந்த தாக்குதலில் சேதமடைந்த கப்பலின் பெயர் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.