கப்பலில் இருந்த மரக்கட்டைகளை வண்டுகள் சேதப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கடந்த ஜூலை 17ஆம் தேதி பான் ஜாஸ்மின் என்ற சரக்கு கப்பலானது நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இருந்த மரக்கட்டைகளின் மேல் ஆசிய வண்டுகள் மற்றும் ஒரு வகை எறும்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வண்டுகள் மற்றும் எறும்புகள் மரங்களையும் பயிர் விளை நிலங்களையும் சேதப்படுத்தும் என கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கப்பலிலிருந்து மரக்கட்டைகள் இறக்கினால் தான் அதிலிருக்கும் சேதம் தெரியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கப்பலானது 590 அடி நீளம் கொண்டது.
இது நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள மிசிசிப்பி ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்றதொரு கப்பலானது இந்தியாவிலிருந்து வெளியேறி மெக்சிகோவின் வெராக்ரூஸில் அலுமினியத்தை இறக்கியுள்ளது. ஆனால் அலுமினியத்தை பாதுகாப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட மரக்கட்டைகள் மெக்சிகோவில் இறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூயார்க் நகரில் 1996 ல் முதன் முதலாக ஆசிய வண்டுகள் கண்டறியப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 70 ஆயிரம் மரங்களை அவை சேதப்படுத்தியுள்ளன. இந்த வண்டுகளை கட்டுப்படுத்துவதற்காக 530 மில்லியன் டாலர்கள் செலவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.