Categories
உலக செய்திகள்

‘என்ன செய்யறதுன்னு தெரியல’…. நான்கு நாட்களாக எரியும் தீ…. அணைக்கும் முயற்சி தீவிரம்….!!

கப்பலில் நான்கு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுவீடன் சரக்கு கப்பலில் நான்கு நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சரக்கு கப்பலானது மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தது. மேலும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற கப்பல்கள் மூலமாக தண்ணீரை பயன்படுத்தி கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிலும் சரக்கு கப்பலானது மரப்பலகைகளை ஏற்றி வந்ததால் தீயை அணைக்கும் பணியானது மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக கப்பலில் 17 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் எவருக்கும் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |