இந்நிலையில் கிணற்றில் விழுந்தபோது, 30 அடியில் இருந்த குழந்தை, மீட்புப் பணியின்போது 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் ஐஐடி குழுவினரின் மீட்புப் பணியும் தோல்வியை கண்டது. அதைத்தொடர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி குழுவினர், தாங்கள் வடிவமைத்த கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப்பணி நடைபெறும் வரும் நிலையில் சுஜித் மீண்டு வர வேண்டுமென்று தமிழகமே உற்று நோக்கியுள்ளது.
#SaveSujith , #PrayForSujith , என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவதால் இந்தியாவே குழந்தை சுஜித்துக்காக பிராத்தனை செய்து கொண்டு இருக்கின்றது. பார்க்கும் அனைவரும் நெஞ்ச பதைபதைப்புடன் சுஜித்_க்காக வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். தற்போது குழந்தை சுஜித்_தை சாமி காப்பாத்து என்று ஒரு குழந்தை கும்பிடும் வீடியோ வைரலாகி வருகின்றது. தன்னுடைய வீட்டின் சுவரில் இருக்கும் கிருஷ்ணர் , முருகர் படத்தின் முன்பு நிண்டு ஒரு குழந்தை ஒரு பாப்பா குழிக்குள் விழுந்துட்டு அதை நீங்க காப்பாத்துங்க என்று அந்த குழந்தை வேண்டுவது அனைவரையும் கண்கலங்க வைப்பதோடு நெகிழ்ச்சி அடைய வந்துள்ளது.
#SaveSujith My son is praying for you..! Don't worry Sujith pic.twitter.com/bwTurLYSAL
— Badrinarayanan (@badri_mando) October 25, 2019