Categories
உலக செய்திகள்

காபூலில் இருக்கும் மக்களின் நிலை.. “என் முதல் வருத்தமே இது தான்”.. உள்ளூர்வாசியின் வேதனை..!!

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் 5 மணிநேரங்களில் கைப்பற்றி விட்டார்கள். மக்களின் உயிர் பறிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போகிறேன் என்று தெரிவித்துவிட்டு மக்களை கை விட்டுவிட்டு தப்பிவிட்டார், நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி.

தற்போது காபூலில் வசிக்கும் மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அங்குள்ள பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அவரவர் வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். எந்த நேரமும் பரபரப்பாக உள்ள காபூலின் தெருக்கள் பாலைவனம் போன்று இருக்கிறது.

அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு விட்டது. காபூல் நகரின் இடங்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கிறது. சோதனைச் சாவடிகளில் இருக்கும் காவலர்களும் இல்லை. எனவே வாகன ஓட்டுனர்கள் சோதனைச் சாவடிகளில் இருக்கும் தடைகளை அவர்களாகவே தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மேலும் உள்ளூரில் வசிக்கும் ஒரு நபர் தெரிவித்துள்ளதாவது, “நான் இங்கு ஒரு கடை வைத்து நடத்துகிறேன். அதில் பிரெட் விற்பனை செய்கிறேன். இங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் என் நண்பர்கள். தற்போது அவர்களும் இங்கு இல்லை. என் முதல் கவலையே இப்போது உடனடியாக தாடி வளர வேண்டும்.

சிறிது நாட்களில் தாடி எவ்வாறு வளரும். மேலும், என் மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தேவையான அளவு பர்தா இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.

Categories

Tech |