கோவை கார் வெடி விபத்து சம்பவம் குறித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசி உள்ளார். கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
கோவையில் 3 மணி நேரம் தொழில் முனைவர்களை சந்தித்து பேசினார். மாநிலம் கடந்தும் விசாரணை தேவைப்படும் என்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசிலில் ஈடுபடக்கூடாது. கோவையில் காரில் வெடிகுண்டு வெடிக்கப்படவில்லை. மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்தன் மூலம் தான் ஒரு மாநிலத்தில் கட்சியை வளர்க்க முடியும். அதனை விட்டு பாஜக தரம் தாழ்ந்த அரசியல் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.