Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரடியின் தாக்குதலால் விவசாயிக்கு காயம்… பொதுமக்கள் அச்சம்..!!

சத்தியமங்கலம் அருகில் கரடி தாக்கியதில் விவசாயி காயம் அடைந்த சம்பவம் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ள புதூர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசித்து வருகின்றன. இந்த கரடிகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து செய்யும் அட்டகாசத்தால் பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் என்று புதுக்குய்யனூரைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரை புதரின்  மறைவிலிருந்து இரண்டு கரடிகள் தாக்க முயன்றன.

அவர் கையில் வைத்திருந்த தடியைக் கொண்டு கரடிகளை விரட்டினார்.. ஒரு கரடி ஓடிவிட்டது. ஆனால் மற்றொரு கரடி அவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட கிராம மக்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தினமும் பயமுறுத்தும் இந்த கரடிகளை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |