வளர்ப்பு நாய் கரடியிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குஞ்சப்பனை பகுதியில் விவசாயியான ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பப்பி என்கிற நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் ராமராஜ் விவசாயம் செய்து கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் தாய் கரடி வெளியே வந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராமராஜ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது கரடி அவரை தாக்க முயன்றுள்ளது.
இந்நிலையில் ராமராஜை கரடி தாக்குவதை பார்த்ததும் கோபமடைந்த நாய் பப்பி குரைத்தபடி கரடியை விடாமல் துரத்தி உள்ளது. இதனால் கரடி தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. அதன்பின் அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ராமராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு வளர்ப்பு நாய் தனது எஜமானரை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.