மணப்பாடு கடற்கரையில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகில் அதிகாலை 9 மணியளவில் 25 வயது முதல் 35 வயதுவரை உள்ள மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து குலசேகரபட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.