மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் கரப்பான் பூச்சி தொல்லையால் 18 வீடுகளை மாற்றியுள்ளனர்.
மத்திய பிரதேசம் போபாலில் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு திடீரென ஒருநாள் மனைவி சமையல் அறைக்குள் இருக்கும் பொழுது கரப்பான்பூச்சி ஒன்று வந்துள்ளது .அதனை பார்த்து அலறி கத்திய மனைவியின் குரலை கேட்டு அனைவரும் வந்து கரப்பான் பூச்சியை வெளியேற்றியுள்ளனர்.
மேலும் கரப்பான் பூச்சியின் தொல்லை தாங்க முடியாமல் வேறு வீடு மாற்றுமாறு மனைவி கூறியுள்ளார். ஆகையால் வீடும் மாற்றிய பிறகு அங்கேயும் கரப்பான் பூச்சியின் தொல்லைக்கு தீர்வு கிடைக்காததால் மீண்டும் வேறு வீடு மாற்றினார்கள் இதேபோன்று 3 வருடங்களில் 18 வீடுகள் மாற்றி விட்டார்கள்.
தற்போதும் கணவர் வீடு தேடி அலைந்து வரும் நிலையில் மனைவியை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் பூச்சியின் மேல் இருக்கும் பயம் அவருக்க துளியும் குறையவில்லை. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளையும் உட்கொள்ள மறுத்து விட்டார்.
எனவே இனிமேல் வீடு தேடி அலைய முடியாது என்று மனைவியை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்துவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கணவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளார். ஒரு சிறிய கரப்பான் பூச்சியால் கணவன் மனைவி பிரிவது என்பது அனைவரிடத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .