ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் எச்சரித்துள்ளார் .
தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வார முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் முறையாக கடை பிடிக்கிறார்களா என்று கண்காணிப்பதற்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்ட் சுகுணா சிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருந்து கடை மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பதற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களாக இருந்தால் அவர்களது கையில் திருமண அழைப்பிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் விமான நிலையம், ரயில் நிலையம் செல்பவர்களாக இருந்தால் அதற்கான டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணத்திற்கு வெளியில் சுற்றியிருப்பவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்ட் சுகுணா சிங் எச்சரித்துள்ளார்.