கார் டிக்கியில் மறைத்து வைத்து ஆடுகளை கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து குபேந்திரன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை யாருக்கும் தெரியாமல் கடத்தி அவர்கள் வந்த காரின் பின்பக்கம் உள்ள டிக்கியில் வைத்து அடைத்தனர். மேலும் அவர்கள் சில வீடுகளில் இருந்து 3 ஆடுகளை கடத்தி காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சத்தம் கேட்டு சந்தேகமடைந்த மக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மர்ம நபர்கள் 3 ஆடுகளை அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு மொத்தம் 6 ஆடுகளுடன் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். இதனால் ஊர் மக்கள் அவர்களை விரட்டி சென்றனர்.
இதனையடுத்து மன்னார்குடி ரோட்டில் கார் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஆடுகளை ஏற்றி சென்ற காரில் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நின்தனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.