Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வந்த சத்தம்…. அதிஷ்டவசமாக தப்பிய அதிகாரி…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

திருப்பூர் மாவட்டத்தில் சசாங் சாய் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். இதனையடுத்து கோர்ட்டில் தனது பணிகளை முடித்துவிட்டு திருப்பூருக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி 4 வழிச்சாலையில் போலீஸ் சூப்பிரண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் டயர் வெடித்தது.

இதனால் டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதன்பின்  அவ்வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Categories

Tech |