கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து இந்த பாலம் சேதமடைந்ததால் ரஷ்யா – கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கெர்ச் பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைப்பதற்கு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிரிமியாவில் 40 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவு ஆகியவை கையிருப்பிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. வடக்கு ரஷ்யாவிலுள்ள ரூஸ் டமன் தீபகற்பம் வரை ஒரே ஒரு படகு மட்டும் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்த எண்ணிக்கை 3ஆக அதிகரிக்கயுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.