Categories
தேசிய செய்திகள்

14 பேருக்கு கொரோனா உறுதி…. காப்பாற்ற சென்றவர்கள் மீது கல்வீச்சு…. கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடகாவில் கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல முயன்ற சுகாதாரதுறை அதிகாரிகளை கிராம மக்கள் கற்களால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப் பட்ட நிலையில், பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களில் மட்டும் ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்,

சென்னையை காட்டிலும் அதிக பாதிப்பு நிகழும் இடமாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலத்திற்கோ, மாவட்டத்திற்கோ செல்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வந்த 14 பேருக்கு இரண்டாவது கட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பின் அவர்களை பரிசோதனையில் அனுமதிக்க காவல்துறையினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் முயற்சித்த போது சுகாதாரத்துறை ஊழியர்களையும், காவல்துறையினரையும் அங்கே உள்ள கிராம மக்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |