கர்நாடக அரசை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதில் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார்.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் பற்றி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, காவேரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை என்னும் நீதியை காற்றில் பறக்கவிட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்ட நீதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என கூறியுள்ளனர்.