கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நோயின் தீவிரத்தை குறைக்க கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி நாளை இரவு 9 மணி முதல் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் எனவும் காலை 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமானம், உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் மட்டுமே சீராக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, மேலும் மாநிலத்தின் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.