தென்மேற்கு பருவ மலையின் தீவிரத்தால் கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி ஹாக்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஆசன், கூடக்க மற்றும் ஷிமோகா ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகள் வடக்கு மற்றும் தென்பகுதியின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கர்நாடகா இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.