Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம் வரும் மே 8ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

கர்ணன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். கர்ணன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

அதன்படி தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |