நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க , பண்டாரத்தி புராணம், தட்டான் தட்டான் ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
Here is the update you all waited for, #Karnan teaser arrives on March 23rd. How excited are you? @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/chMKE4CpaQ
— Kalaippuli S Thanu (@theVcreations) March 20, 2021
இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . அதன்படி இந்த படத்தின் டீசர் மார்ச் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது . இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.