கர்ணன் திரைப்படம் சொன்னபடி இன்று ரிலீஸ் ஆனதால் தனுஷ் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் திடீரென கொரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப் பட்டதால் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகாது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு கட்டாயம் சொன்னபடி ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையோடு ஒளிபரப்பாகி வருகிறது.
இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகள் முன் குவிந்து தனுஷின் உருவம் கொண்ட பல அடி கட்டவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து, மலர் தூவி கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.