கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்
சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். மேலும் கர்நாடக எம்பிக்கள் அனைவரையும் இன்று மாலை 7 மணி அளவில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேச உள்ளார். மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ராஜேந்திர சிங் செகாவத் தையும் சந்திக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.