கர்நாடகாவிற்குள் தமிழ்நாடு உட்பட 4 மாநில எல்லை மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதல் நாளாவது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. நாளாவது பொது முடக்கும் அறிவிப்போடு, பல்வேறு தளர்வுகளை பிறப்பித்த மத்திய அரசு , பல்வேறு அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கியது. மாநிலத்தில் என்ன இயங்கலாம் ? எவ்வளவு நேரம் இயங்கலாம் ? என்ன இயங்க கூடாது ? போன்ற பல்வேறு முடிவுகளை மாநிலங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு வழிகாட்டு நெறிமுறையையும் வகுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை இயக்கிக் கொள்ளலாம். மாநிலத்துக்கு மாநிலம் அனுமதி இருந்தால் பேருந்து சேவை தொடரலாம் என்று பல்வேறு அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் அம்மாநில முதலமைச்சர், மாநிலம் முழுவதும் போக்குவரத்து, ரயில் சேவைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மாவட்டத்திற்குள்ளேயே ரயில், பேருந்து சேவையை இயங்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளை திறந்து கொள்ள அனுமதித்த முதல்வர் எடியூரப்பா , தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய நான்கு மாநில மக்கள் மே 31ஆம் தேதி வரை கர்நாடக மாநில எல்லைகளுக்குள் நுழைய தடை விதிப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவத்துள்ளார்.