Categories
தேசிய செய்திகள்

சொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி விபத்து: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது?

காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) என்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகம்மது நலபாத். இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சொகுசுக் காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கால் எலும்பு முறிந்தது.

Image result for Karnataka Congress MLA's son arrested for driving a luxury car

இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகனின் காரை இயக்கி விபத்துக்குள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் கைதாக வந்துள்ளார். ஆனால் காரை இயக்கியது எம்எல்ஏ மகன் என்பது குறித்து காவலர்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், அந்த இளைஞரைக் காவலர்கள் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது என்று காவல் ஆணையர் பி.ஆர். ரவிகாந்த்தே கவுடா கூறினார்.

முகம்மது நலபாத் மீது ஏற்கனவே அடிதடி வழக்கு ஒன்றும் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் நள்ளிரவில் ஒரு தகராறில் சிக்கினார். இதையடுத்து அவர் மூன்று மாத நீதிமன்ற காவலுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |