Categories
தேசிய செய்திகள்

திப்பு சுல்தான் வரலாறு குறித்த சரச்சை – அமைச்சர் விளக்கம்..!!

 பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக திடமாகப் போராடியவர் திப்பு சுல்தான். இவரின் பிறந்தநாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால், பாஜகவோ திப்பு சுல்தான் இந்துக்களைக் கொடுமைப்படுத்தியவர் என்றும் அவர் ஒரு தீவிரவாதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையாக மாறியது.

மேலும் பள்ளிப் புத்தகங்களில் உள்ள திப்பு சுல்தான் வரலாற்றை நீக்குவோம் என பாஜக அறிவித்தது. இந்நிலையில், கர்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “வரும் கல்வியாண்டில் திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது. இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாச்சு ரஞ்சன் மூன்று மாதங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதுகுறித்து ஆய்வுசெய்ய பரிந்துரைத்துள்ளேன். இந்த விவகாரம் குறித்த தெளிவான பார்வை தேவை. பள்ளிப் புத்தகங்களை அச்சடிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது” என்றார்.

Categories

Tech |