கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம் என கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கேரள அரசு வெற்றிகரமாக தனது தங்களது மாநில மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அரசோ மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தேர்வு நடத்திய கர்நாடக அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.