மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடக அதிருப்தி MLA_க்கள் சபாநாயகரை சந்தித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில் , ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். எம்.எல்.ஏக்கள் ஒரு சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டுமா? மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன். என்னை அணுகி இருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கி இருப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.