Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடக மாநில புதிய சபாநாயகர் ”விஸ்வேசுவர ஹெக்டே காகேரி” ஒருமனதாக தேர்வு…!!

கர்நாடக மாநில புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக சார்பில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபித்து  புதிய அரசை அமைத்தது. மேலும்  சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிருந்த சூழலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின்  கூட்டணி அரசு சார்பில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து , ராஜினாமா கடிதத்தை  துணை சபாநாயகரிடம்  அளித்தார்.

இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று  நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டு அதற்கான வேட்புமனு 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,  பாஜக சார்பில் முன்னாள் சபாநாயகர் கே.ஜி.போப்பையா போட்டியிடுவார் என்று சொல்லப்பட்ட்து.

Image result for விஸ்வேசுவர ஹெக்டே காகேரி

ஆனால் பாஜகவின் தலைமை உத்தரவுப்படி முன்னாள் அமைச்சரும், பாஜகவின் எம்.எல்.ஏ.வுமான விஸ்வேசுவர ஹெக்டே காகேரி நேற்று மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சி  வேட்பாளர்களை நிறுத்தாததால், விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக கர்நாடக மாநில சபாநாயகராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Categories

Tech |