கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.இந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் பலம் 99 ஆக குறைந்து விட்டது.இதனால் 106 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.
இந்த பிரச்சனையில் ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களின் கடிதத்தை ஏற்காமல் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.மேலும் அவர்கள் 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் சபாநாயகரின் உத்தரவு. இவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் இரண்டு தொகுதிகளுக்கு தற்போது பொதுத் தேர்தல் நடைபெறவில்லை , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்த 15 பேரும் போட்டியிட முடியாது.
மேலும் தேர்தல் நடைபெற உள்ள 15 இடங்களில் தற்போது ஆட்சியில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி குறைந்தது 8 இடங்களை வெல்ல வேண்டும். அப்போதுதான் எடியூரப்பா ஆட்சியை தொடர முடியும். 8 இடங்களுக்கு குறைவாக பாஜக வென்றாள் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள 15 தொகுதி இடைத்தேர்தல் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும் .