15 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டுச்சென்ற கணவரை ,தற்போது வீட்டிற்குள் சேர்க்க அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனுமதிக்கவில்லை.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலுள்ள ,காடு கொத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 55 வயதுடையவர் சிவராமு. இவருக்கு பிரபாவதி என்று மனைவியும் அக்ஷய் என்ற மகன் மற்றும் அம்ருதா என்ற மகளும் உள்ளனர். கணவர் சிவராமன் 15 ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து ,பெங்களூருவில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தன்னுடைய சொந்த கிராமத்திலுள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதி அளிக்கவில்லை.
எனவே குடும்பத்தினர் வீட்டிற்குள் அனுமதிக்காததால், அவர் வீட்டு வாசலில் படுத்த படுக்கையாக இருக்கிறார். இதைப்பற்றி அவர் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கேட்ட போது, நோயால் பாதிக்கப்பட்ட சிவராமுக்கு 15 வருடத்திற்கு முன், சொந்தமாக 5 ஏக்கர் நிலமும் சொந்த வீடும் இருந்தது. அவர் அதிகமாக கடன் வாங்கியதால், கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டார். இதன் காரணமாக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு குடும்பத்தாரிடம் சொல்லாமல் பெங்களூருக்கு சென்றார்.
மனைவி பிரபாவதி கூறும்போது, கணவர் என்னை தனியே தவிக்க விட்டு சென்றதால், நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும், என் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலையில் கொண்டுவருவதற்கு பெரும்பாடுபட்டதாகவும் கூறினார். இதன் காரணமாக தான் நோயால் பாதிக்கப்பட்ட என் கணவரை வீட்டிற்கும் அனுமதிக்கவில்லை என்று கூறினார். ஆனால் கணவர் சிவராமன் ,என்னுடைய உயிர் இந்த வீட்டில் தான் பிரிய வேண்டும் என்று உருக்கத்தோடு கூறினார். இந்த விவகாரமானது அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.