கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ,அவருடைய அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாவட்டத்திலுள்ள ,ஒன்னாளி டவுன் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ,அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தன் தாய், தந்தை மற்றும் பெரிப்பா குடும்பதோடு கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்து வந்தார். சிறுமியின் கூட்டு குடும்பத்தில், 17 வயதுடைய பெரியப்பாவின் மகன் ஒருவரும் இருந்துள்ளார். பெரியப்பா மகன் இந்த சிறுமிக்கு சகோதரர் முறையாகும். இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாந்தி ,மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர் அந்த சிறுமியை பரிசோதித்த போது, சிறுமி 3 மாதம் கர்பமாக இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ,சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மருத்துவர்கள் ,குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, கூட்டு குடும்பத்திலுள்ள பெரியப்பாவின் மகனான 17 வயதுடைய சிறுவன், தன்னுடைய தங்கை என்று பார்க்காமல், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இந்த ‘விஷயத்தை பற்றி யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவேன்’ என்று சிறுமியை மிரட்டி உள்ளார்.
இவ்வாறு சிறுமி போலீசார் நடத்திய விசாரணையில், நடந்த உண்மையை கூறினார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை மேல்சிகிச்சைக்காக ,சிவமொக்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் ,சிறுமியிடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிறுமியின் சகோதரரான 17 வயது சிறுவனை ,போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . இந்த சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.