Categories
தர்மபுரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Categories

Tech |