கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின் என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவரை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணா தேவி ஏமாற்றம் அடைந்தார். மனமுடைந்த அவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த 3 பேரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.