Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே.. தினமும் இதை செய்யுங்கள்.. உங்களுக்கும், குழந்தைக்கும் ரொம்ப நல்லது..!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களே தினமும் இதை செய்யுங்கள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும் ரம்பா நல்லது:

ஆப்பிள் ஜூஸ்:

ஆரோக்கியமும் சுவையும், உடல் பொலிவும் கொடுக்க கூடியது ஆப்பிள் ஜூஸ். ஆப்பிள் சாப்பிடுவதாலும் அதை ஜூஸாக குடிப்பதாலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.

ஆரஞ்சு ஜூஸ்:

ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். ஆரஞ்சில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

மோர்:

பால் பொருளான இந்த மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் குழந்தையின் எலும்புகள் வழுவாக மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும் இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இஇளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இளநீரில் அருந்துவதால் எண்ணிலடங்காத நன்மைகள் உண்டாகின்றன.

பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் பாதுக்காக்கிறது.

எலுமிச்சை சாறு:

புத்துணர்வை அளிப்பதில் மிகச்சிறந்தது. இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. எலுமிச்சை சாறு விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் சி ஆனது உங்களது உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவியாக உள்ளது.  இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.

தண்ணீர்:

தண்ணீர் தினமும் குடிப்பது நமது கடமையும் கூட இதை அதிகம் பருக வேண்டும்.  கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு குடிக்க வேண்டும்.  முக்கியமும் கூட.  உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்கவும் தண்ணீர் பருகுவது உதவுகிறது.

இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது. நீங்கள் கண்டிப்பாக தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

வெள்ளரிக்காய்:

தினமும் வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். சுவையானதும் கூட.

கர்ப்பிணி பெண்கள் பால் குடிப்பது மிகவும் நல்லதாகும். தினமும் இரவு உறங்கும் முன்னர் பால் அருந்துவதால் நன்றாக தூக்கம் வரும். மேலும் பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது.

பண்ணீர்:

சைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் நிறைந்த  ஒன்று தான் பன்னீர்.  புரோட்டீன் மட்டுமின்றி, கால்சியமும் அதிக அளவில் அதிகம் உள்ளது. எனவே கர்ப்பிணிகள் பன்னீரை அவ்வப்போது எடுத்து வருவது நல்லது.

காய்கறிகள்:

பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

காராமணி:

ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் என்ன முடியாத அளவில் நிறைந்து இருக்கிறது. இதனை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பால்:

பால் சம்மந்தமான பொருட்களில் அதில் ஒன்று தயிர் அதில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக கூடிய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது.  கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால்,  தயிரை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பீன்ஸ்:

பல வகைகள் இருக்கிறது பீன்ஸில், அனைத்து வகையான பீன்ஸிலும் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் சுறுசுறுப்பை கொடுக்கும்,  பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பருப்புகள்:

தினமும் கர்ப்பிணிகள் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளுங்கள், உடலுக்கு வேண்டிய அளவு புரோட்டீனானது கிடைக்கும். ஆகவே உணவில் பருப்பு வகைகளை மறக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.

தேங்காய்:

நம் உடலில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதை கர்ப்பிணி பெண்கள்  உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். இந்திய மூட நம்பிக்கைகளின் படி கர்ப்பிணிகள் தேங்காய் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்குமாம். அது தவறாகும். தேங்காயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லதே கொடுக்கும்.

நட்ஸ்:

பாதம், முந்திரி ஆகியவைகளை கர்ப்பிணி பெண்கள் தினமும் சாப்பிட்டால், வைட்டமின் ஈ கிடைக்கும். இதை நீங்கள் ஸ்நாக்ஸாக எடுத்து கொள்ளுங்கள்.

வாழைப்பழம்:

கர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடுங்கள், இதனால் கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு தேவைப்படும் எனர்ஜி அதிகமாக கிடைக்கும். நம் உடலில் நார்ச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும், குடலியக்கம் சீராகும்.

 

Categories

Tech |