அமெரிக்காவில் 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக சுட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் பிலடெல்பியா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள லாங்கேஸ்ட் என்னும் இடத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் 32 வயதாகும் 7 மாத கர்ப்பிணியை தலை மற்றும் வயிற்றில் சுட்டுள்ளார். இதற்கிடையே 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் அந்தப் பெண்மணி தன்னுடைய வளைகாப்பிற்காக வந்த பரிசுப் பொருட்களை தனது காரிலிருந்து இறக்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போதே மேல் குறிப்பிட்டுள்ள இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மர்ம நபர் 7 மாத கர்ப்பிணியை சுடும் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் அந்த பெண்மணி துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களால் துடித்துக் கொண்டுள்ளார். இதனை கண்ட காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்மணியை அருகில்லுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அதாவது 7 மாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணை மர்மநபர் குறிவைத்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.