Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கர்ப்பிணி பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனடைப்பு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பின் பாரதி நகரில் வசித்து வந்துள்ளனர். தற்போது லட்சுமி பிரியா கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் லட்சுமி பிரியா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமி பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |