Categories
உலக செய்திகள்

“காதலரின் நாயுடன் வாக்கிங்”… 6 மாத கர்ப்பிணியை கடித்துக் கொன்ற நாய்… DNA சோதனையில் வெளிவந்த உண்மை…!!

பிரான்சில் 6 மாத கர்ப்பிணி பெண் நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரது காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Elisa Pilarski என்ற 29 வயது பெண் பிரான்சில் உள்ள வனப்பகுதியில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லும் நாய்கள் கடித்து குதறியதில் Elisa உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. இதனால் வேட்டை நாய்களை கொண்டு வேட்டையாடுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் Elisa உயிரிழக்கும் போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் இந்த சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் Elisa -வை கொன்றது எந்த நாய் என்பதை கண்டறிவதற்காக அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. தற்போது அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் Elisa தனது காதலர் Chiristope Lucian Joseph-ன் வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அந்த நாய் Elisa-வை கடித்து குதறியது சோதனையில் தெரிய வந்துள்ளது.

மேலும் Elisa-வின் உடலில் இருந்த காயங்கள் Chiristope வளர்க்கும் நாயின் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது. அந்த நாயை கட்டியிருந்த கயிற்றில் Elisa-ன் டிஎன்ஏ கண்டறியப்பட்டு உள்ளது . எனவே Elisa-வை கொன்றது Chiristope-ன்  நாய் என்று நிரூபணமானதால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |