லண்டனில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மர்மநபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் லண்டனில் உள்ள Staford Hill என்ற சாலையில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துணியால் அந்த பெண்ணின் முகத்தை மூடி வயிற்றில் பலமாக இரண்டு, மூன்று முறை குத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண் போராடி அந்த நபரிடமிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு பெண்ணிடம் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த 7 மாத கர்ப்பிணி பெண் யூத மதத்தை சேர்ந்தவர் என்பதால் இது யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.