Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. விசாரணையில் தெரிய வந்த உண்மை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பெண் கையில் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து அவரிடம் இது குறித்து அனைத்து மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாரதி விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் அவர் தான் ஏமாற்ற பட்டிருப்பதாகவும், அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |