தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது 30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று வருகின்றனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்கள் யாருக்காவது குழந்தை பிறப்பிற்கு முன்பும் அல்லது குழந்தை பிறந்த பிறகும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை இந்த சுகாதார மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் சொக்கம்பட்டியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தொற்று சிகிச்சை மையமாக தற்போது செயல்பட்டு வருகின்றது.
இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் 30 படுக்கைகளிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணிபெண்களை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனால் அந்த சுகாதார நிலையத்தில் இடம் இல்லாத காரணத்தினால் அரியப்பபுரம் துணை சுகாதார நிலையத்திற்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர் .