கர்ப்பிணிப்பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
லண்டனில் கடந்த மார்ச் 18ம் தேதி மாலை 6 மணி அளவில் பெண் ஒருவர் சாலையில் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை வயதான நபர் ஒருவர் பின்தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் Tottenham- சேர்ந்த 59 வயதான Keith Gowers என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் அடுத்த நான்கு நாள்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குறிப்பாக அந்த சிசிடிவியில் வெளியான காட்சியில் அவர் தலையணை உறையை அந்த பெண்ணின் முகத்தில் வைத்து குத்தியுள்ளார்.
இதனால் அந்தப் பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரின் உதடு கிழிந்தும், கையில் உள்ள கட்டைவிரலில் காயமும் ஏற்பட்டுள்ளது. அதிலும் அந்தப்பெண் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி உடைந்தது. குறிப்பாக அவர் 6 மாதக்கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது Keith Gowers குற்றத்தை தானே ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பானது வரும் அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.