Categories
அரசியல்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி… ஹெச்.ராஜா_வை எதிர்த்து களம் இறங்குகிறார்…!!

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில்  9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து   இழுபறி நீடித்து வந்தது.

Image result for கார்த்தி சிதம்பரம் போட்டி... ஹெச்.ராஜா

இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்படாத மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுமென்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார். இதையடுத்து  சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது . அதிமுக கூட்டணி சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜகவின் ஹெச்.ராஜா வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |