Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பறம் என்ன… நம்ம சூர்யா தம்பியே சொல்லிட்டாரு… சிங்கத்தின் வேட்டை தொடரும்..!!

சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது.

Image result for கார்த்தி சூர்யா

இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி தெரிவித்துள்ளார். ‘கைதி’ படத்தின் தெலுங்கு வெர்சனின் முன் வெளியீட்டு விழாவில் கார்த்தி, இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறனும் சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Image

சூர்யா யாரைத் தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஹரியுடன் பணிபுரிந்தால் அது ‘சிங்கம் 4’-ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது என கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது. சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். ரசிகர்களும்  ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே காப்பான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |