நடிகர் கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த “ஜப்பான்” திரைப்படம் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் கார்த்தி வித்தியாசமான கெட்டப்பில் அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.