‘விருமன்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தினை கார்த்தி நிறைவு செய்துவிட்டு சர்தார் படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Our @Karthi_Offl's #Viruman is in it's last stages of shooting. He will be hopping on to the sets of #Sardar in a different look soon! Wait for it#Karthi @2D_ENTPVTLTD @dir_muthaiya @Prince_Pictures @Psmithran pic.twitter.com/Fonl7OZbB4
— Johnson PRO (@johnsoncinepro) December 13, 2021