நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். திகில் கதையம்சம் கொண்ட இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் இரட்டை வேட நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான சிறுத்தை திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் மீண்டும் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.