Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ படத்தில் இணைந்த கார்த்திக்…. பூங்கொத்து அளித்து வரவேற்ற படக்குழு….!!!

நடிகர் கார்த்திக் அந்தகன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான ‘அந்தாதூன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இப்படத்தை தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடல்நிலை பிரச்சினை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கார்த்திக் தற்போது உடல்நலம் குணமடைந்து வந்தவுடன் அந்தகன் படத்தில் இணைந்துள்ளார். அவரை சிம்ரன், பிரசாந்த், இப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றுள்ளனர்

Categories

Tech |