Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் கார்த்திக்…. கவர்ச்சி நடனமாடும் சன்னி லியோன்…!!

நடிகர் கார்த்திக் படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட உள்ளார்.

நவரச நாயகனாக திகழும் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “தீ இவன்” படம் மூலமாக கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த டிஎம் ஜெயமுருகன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுகன்யா நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

தீ இவன் படக்குழு

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் 45 நாட்களுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக சென்னையிலும், மும்பையிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆடும் காட்சி இடம்பெற உள்ளதாம்.நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |