நடிகர் கார்த்திக் படப்பிடிப்பின்போது கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சிம்ரன் சமுத்திரக்கனி, வனிதா, ப்ரியாஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர்கார்த்திக் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார்.